ரகசிய நாக கதவு.. 6 வது அறையில் மறைந்துள்ள மர்மம்.. திகைப்பூட்டும் பத்மநாபசாமி கோயில்.. எங்கே இருக்கு..?
உலகின் உள்ள பணக்கார ஆலயங்களில் ஒன்றான கேரளாவின் தலைநகராக திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் 6 ரகசிய அறைகள் பூட்டப்பட்டு இருந்தன. அந்த கோயில் மற்றும் அதன் ரகசிய அறையின் சிறப்பம்சம் என்ன என்பதைப் பார்ப்போம்...
ஸ்ரீரங்கம், திருவள்ளூர் போல பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தருபவர் பத்மநாப சுவாமி. பிரமாண்ட உருவத்தில் பள்ளிகொண்டிருக்கும் சுவாமியை மூன்று வாசல் வழியாக பார்க்க தலை, மார்பு, கால் பகுதியைப் பார்க்கும் வண்ணம் கோயில் கருவறை அமைந்துள்ளது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கும் இந்த கோயில் 260 ஆண்டுகளுக்கு முன் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த கோயில் திருவாங்கூர் சமஸ்தான குடும்பத்தினரின் பரம்பரை பரம்பரையாக நிர்வகித்து வந்தானர்.
பத்மநாபசாமி கோயில் ரகசிய அறைகள் : உலகிலேயே மிகவும் பணக்கார கோயிலாக கூறப்பட்டு வரும் பத்மனாபசாமி கோயிலின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று இன்று வரை யாருக்கும் தெரியாது. பத்மனாபசாமி திருக்கோயிலில் 6 அறைகளில் பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் அரச குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் இந்த கோயிலின் சொத்து மதிப்பை அறிவதற்காக சுப்ரீம் கோர்ட் ஆர்டரின் பெயரில் 5 பேர் கொண்ட குழு நிர்வாகிக்கப்பட்டு கோயிலில் உள்ள இந்த 6 அறையையும் திறந்து பார்க்க முடிவு செய்தது.
பூமிக்கு அடியில் 5 அடி ஆழத்தில் A முதல் F வரை உள்ள அறைகளை இதுவரை 1990 ஆம் ஆண்டு 2முறையும் 2002ஆண்டு 5 முறை மட்டுமே திறந்து உள்ளனர். இதில் B அறை இதுவரை திறக்கப்படவில்லை. இதுவரை திறக்கப்பட்ட அறைகளில் 7 கிலோ மதிப்புடைய 1700 தங்க காசுகள் கிடைத்துள்ளன. மேலும் நெப்போலியன் காலத்து நாணயங்களும், விலைமதிப்பற்ற பட்டு துணிகள், ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இதுவரை திறக்கப்படாத மர்மமாக உள்ள B அறையை திருவிதாங்கூர் அரசு குடும்பம் திறப்பதற்கு அனுமதிக்கவில்லை.
மேலும் இந்த அறையை திறந்தால் நாடே சாபத்திற்கு உள்ளாகும், கடவுளின் கோபத்திற்கு ஆளாக வேண்டியது இருக்கும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் இன்று வரை மர்மங்கள் நீடிக்கும் கோயிலாகவே பத்மனாபசாமி கோயில் இருந்து வருகிறது. மேலும் பல சக்தி வாய்ந்த மந்திரங்களாலும், பாம்புகளாலும் இக்கோயிலின் அறை பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது.
Read more ; இப்பதான் திருமணமாச்சு.. விவகாரத்தை அறிவித்த பைரவா பட நடிகை!!!