பத்ம ஸ்ரீ விருது பெற்ற பழங்குடியின பெண் கமலா புஜாரி காலமானார்...! பிரதமர் மோடி இரங்கல்...!
பத்மஸ்ரீ விருது பெற்ற கமலா பூஜாரி மறைவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டம் பத்ராபுத் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கமலா புஜாரி. வயது 76. இயற்கைவழி வேளாண்மையை ஊக்குவித்து வந்த இவர், 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து வந்தார். இவருடைய இந்த சேவையைப் பாராட்டி மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நேற்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
பத்மஸ்ரீ விருது பெற்ற கமலா பூஜாரி மறைவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விவசாயத்தில், குறிப்பாக இயற்கை வேளாண் நடைமுறைகளை ஊக்குவித்தல், உள்நாட்டு விதைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் அவர் மகத்தான பங்களிப்பை வழங்கி இருப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; "திருமதி கமலா பூஜாரி அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயத்திற்கு அவர் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதிலும் உள்நாட்டு விதைகளைப் பாதுகாப்பதிலும் அவர் அதிக பங்களிப்பை வழங்கி இருக்கிறார். நிலைத்தன்மையை மேம்படுத்துதல், பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றில் அவரது பணி எப்போதும் நினைவுகூரப்படும். பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.