2024 பத்ம விருதுகள்: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கௌரவிப்பு!
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் 132 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசு தலைவர் வழங்கி கௌரவித்தார்.
தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலை, அறிவியல், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அதன்படி 5 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் மொத்தம் 8 தமிழர்கள் இடம்பெற்று இருந்தனர். இந்த பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, உள்ளதுறை அமைச்சர் அமிக்க்ஷா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பொது விவகாரங்கள் பிரிவில் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. கலைப் பிரிவில் பிரபல பாடகி உஷா உதுப்புக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கவுரவித்தார். அதேபோல் விளையாட்டு பிரிவில் பிரபல டென்னிஸ் வீரர் ரோகன் போப்பன்னாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளப்தி முர்மு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.
கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன.
2024 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் அனைவருக்கும் விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கவுரவித்தார்.