Paavo Nurmi Games 2024!. ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்!. ஒலிம்பிக் போட்டிக்கு தயாரான நீரஜ் சோப்ரா!
Neeraj Chopra: பாவோ நூர்மி விளையாட்டு போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
நடப்பு ஆண்டின் பாவோ நுர்மி விளையாட்டுப் போட்டி பின்லாந்தின் துர்குவில் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியா, உள்ளிட்ட 8 வீரர்கள் பங்கேற்றனர். இதில் நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா, 85.97 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றார். ஈட்டி எறிதல் போட்டியின் முதல் சுற்றில் நீரஜ் 83.62 மீட்டர் தூரம் எறிந்து முன்னணியில் இருந்தார். ஆனால், பின்லாந்து நாட்டை சேர்ந்த ஹெலாண்டர் 83.96 மீட்டர் தூரம் எறிந்து நீரஜை விட தூரம் எறிந்து முன்னிலை பெற்றார்.
அதன் பிறகு, நடைபெற்ற மூன்றாவது சுற்றில் தான் நீரஜ் 85.97 மீட்டர் தூரம் அசத்தலாக ஈட்டியை எறிந்து மீண்டும் முன்னிலை பெற்றார். இதன் மூலம் தங்கப்பதக்கத்தை வென்று இந்திய நாட்டிற்கு பெருமையை தேடி தந்துள்ளார். நீரஜ் 5-வது முறையாக இந்த பாவோ நர்மி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது தங்கம் வென்று இருப்பதன் மூலம், நீரஜ் சோப்ரா 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தான் தயார் நிலையில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரம், கடந்த 2022-ம் ஆண்டின் பாவோ நர்மி விளையாட்டுப் போட்டியில் பின்லாந்தை சேர்ந்த ஒலிவர் ஹெலாண்டர் நீரஜை முந்தி தங்கப் பதக்கம் வென்றார் குறிப்பிடத்தக்கது.
Readmore: திக்!. திக்!. 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. அலறும் மும்பை!