கோவிஷீல்டால் பேராபத்து!… ஒரே மாதிரியான ஆபத்து ஆன்டிபாடிகள் உற்பத்தி!… மரபணுவை நேரடியாக தாக்கும்!
Covishield: அடினோவைரஸ் தொற்று மற்றும் அடினோவைரல் தடுப்பூசி ஆகியவற்றில் PF4 ஆன்டிபாடிகள் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது ஆபத்தான ஆன்டிபாடிகளின் உற்பத்தி மரபணு ஆபத்து காரணிகளில் ஒற்றுமையைக் கொண்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக கொரோனா தடுப்பூசிகள் குறித்த அதிச்சி தகவல் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. அந்தவகையில், கோவிஷீல்டு தடுப்பூசி, ரத்தம் உறைதல் உள்ளிட்ட அரிதான பக்கவிளைகளை ஏற்படுத்தும் என்று அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா சமீபத்தில் ஒப்புக்கொண்டது. இதனை தொடர்ந்து தற்போது கோவாக்சின் தடுப்பூசியும் பக்களவை ஏற்படுத்தும் என்று அடுத்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
இருப்பினும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் உட்பட பல்வேறு நாடுகளின் நீதிமன்றங்களில் வழக்குகள் மற்றும் கோரிக்கைகள் நடந்து வரும் நிலையில், தடுப்பூசி விற்பனையை வணிக காரணங்களுக்காக திரும்பப் பெறப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிலையில், அடுத்த அதிர்ச்சி தரும் செய்தியாக அஸ்ட்ராஜெனகா கோவிஷீல்டு தடுப்பூசி, மற்றொரு அரிதான அபாயகரமான இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பிற சர்வதேச நிபுணர்களின் சமீபத்திய ஆய்வில், அடினோவைரஸ் தொற்று மற்றும் அடினோவைரல் தடுப்பூசி ஆகியவற்றில் PF4 ஆன்டிபாடிகள் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. "உண்மையில், இந்த கோளாறில் ஆபத்தான ஆன்டிபாடிகளின் உற்பத்தி மரபணு ஆபத்து காரணிகளில் ஒற்றுமையைக் கொண்டுள்ளது" என்று ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாம் கார்டன் கூறினார்.
அரிதான சந்தர்ப்பங்களில், அடினோவைரஸ் தொற்றுக்குப் பிறகு இரத்த உறைவு ஏற்படலாம் என்று அவர் விளக்கினார். இதற்கிடையில், 2022 இல், அதே குழு PF4 ஆன்டிபாடி மூலக்கூறு குறியீடு மற்றும் மரபணு ஆபத்து காரணிகளை அடையாளம் கண்டுள்ளது. சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளன. தடுப்பூசி பாதுகாப்பை மேம்படுத்துவதில் உள்ள முக்கியமான சிக்கல்களும் கண்டறியப்பட்டன.
Readmore: ‘ராமரை தொடர்ந்து சீதைக்கும் கோயில்’ மோடியால் மட்டுமே இது முடியும்!! ஒரே போடாய் போட்ட அமித்ஷா!!