For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கரைபுரண்டோடும் வெள்ளம்..!! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

A flood warning has been issued for the people living along the banks of the KRS Dam in Karnataka.
04:33 PM Jul 19, 2024 IST | Chella
கரைபுரண்டோடும் வெள்ளம்     கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Advertisement

கர்நாடகா மாநிலம் கேஆர்எஸ் அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கர்நாடகா மாநிலம் கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், எந்நேரத்திலும் 25,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், எனவே, காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கேஆர்எஸ் அணையில் இருந்து தற்போது 500 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், எந்நேரத்திலும் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான 124 அடியில் தற்போது 118 அடியை எட்டியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கேஎஸ்ஆர் அணையில் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு கூறியிருந்தது. ஆனால், தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால், தண்ணீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக அரசு உள்ளது.

Read More : அடுத்த வாரம்..!! கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார் தவெக தலைவர் விஜய்..!! தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாகம்..!!

Tags :
Advertisement