தண்ணீர் குடித்தால் உயிர் போகுமா.? என்னையா சொல்றீங்க.? அதிகம் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்.!
தண்ணீர் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத பானமாகும். நம் உடல் உறுப்புகள் சீராக செயல்படுவதற்கும் நீரேற்றத்துடன் இருப்பதற்கும் தண்ணீரின் பங்கு இன்றியமையாதது. ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். எனினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப அதிகமான தண்ணீர் குடிப்பது உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மருத்துவ நிபுணர்கள் ஒருவர் அவரது உடல் எடையில் 20 கிலோவுக்கு 1 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றனர். எடுத்துக்காட்டாக ஒருவரது உடல் எடை 60 கிலோ இருக்கிறது என்றால் அவர் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒருவர் அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது அவரது உடலில் பல எதிர்வினைகள் ஏற்படுகின்றன அது உயிருக்கு கூட ஆபத்தாக முடியலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.
உடலில் தேவைக்கு அதிகமான நீர்ச்சத்து இருக்கும்போது தசைப்பிடிப்பு, வாந்தி, மயக்கம் மற்றும் குமட்டல் ஏற்படும். தண்ணீர் அதிகமாக குடிப்பதால் உடலில் சோடியம் சத்தின் அளவு அதிகரிக்கிறது. இது எலக்ட்ரோலைட்களில் சீரற்ற தன்மையை உருவாக்குகிறது. மேலும் சோடியம் நம் உடலில் நீர்ச்சத்தை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. அதிகமாக தண்ணீர் குடிப்பதன் காரணமாக நம் உடலில் இருக்கும் சோடியம் நீர்த்துப்போகும். இதன் காரணமாக உடலில் இருக்கும் செல்கள் வீங்கி மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும் இதனால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த பாதிப்பு ஹைபோநெட்ரீமியா என அழைக்கப்படுகிறது. மேலும் அதிகப்படியான ஹைட்ரேஷன் காரணமாக உடலில் இருக்கும் தசைகள் பலகீனம் ஆவதோடு வாந்தி, குமட்டல் மற்றும் சில நேரம் சுயநினைவு இழப்பு ஏற்படவும் காரணமாக அமைகிறது. எனவே உங்களது உடல் நீரேற்றத்துடன் இருக்கிறதா என்பதை பரிசோதித்து விட்டு அதிக அளவு தண்ணீர் குடிக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நம் உடலின் நீரேற்றம் எவ்வாறு இருக்கிறது என்பதை நமது சிறுநீரின் நிறத்தை வைத்து கண்டறியலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.