வங்காளதேச வன்முறை : நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்..!! 100-யை கடந்த பலி எண்ணிக்கை!!
வங்காள தேசத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தால் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. போலிசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் ராணுவ துறை சார்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டில் முறைகேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், இது தொடர்பாக டாக்கா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அப்போது ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. இதனையடுத்து டாக்காவில் உள்ள ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டத்தில் ஈடுபடும் மாணவ, மாணவிகளுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றது. அதேவேளை, போராட்டக்காரர்களை அந்நாட்டு அரசு அடக்கி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்து வருகின்றனர். இதனால் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த போராட்டத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
Read more ; பிரிந்த கணவன், மனைவியை இணைய வைக்கும் திருக்கோயில்..!! எங்கே உள்ளது தெரியுமா?