30.40 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் தளத்தில் பதிவு...!
2024 நவம்பர் 19 நிலவரப்படி, 30.40 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் இ ஷ்ரம் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் நலன்- வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே; தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகம் 2021 ஆகஸ்ட் 26 அன்று நாடு முழுவதும் இ ஷ்ரம் இணையதளத்தை (eshram.gov.in) அறிமுகப்படுத்தியது. இது ஆதாருடன் சரிபார்க்கப்பட்டு இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான தேசிய தரவுத்தளமாக உள்ளது.
அக்டோபர் 2024-ல், ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 60,000 பதிவுகள் இஷ்ரமில் நடைபெற்றன. 09.10.2024 அன்று ஒரு நாள் பதிவு 97,839-ஐ எட்டியது. 2024 நவம்பர் 19 நிலவரப்படி, 30.40 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் இ ஷ்ரம் தளத்தில் பதிவு செய்துள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு, தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக, திறன் மேம்பாடு - தொழில்முனைவோர் அமைச்சகத்தின் திறன் இந்தியா டிஜிட்டல் தளத்துடன் இ ஷ்ரம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை இ ஷ்ரம்-முடன் ஒருங்கிணைப்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும் என தெரிவித்துள்ளார்.