For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கேள்விக்குறியாகும் கோயம்பேடு பேருந்து நிலையம்!… பாரிஸ் கார்னரின் நிலைதான்!

12:30 PM Dec 31, 2023 IST | 1newsnationuser3
கேள்விக்குறியாகும் கோயம்பேடு பேருந்து நிலையம் … பாரிஸ் கார்னரின் நிலைதான்
Advertisement

சென்னையில் வெளியூர் பேருந்துகள் வந்து செல்லும் பேருந்து நிலையம் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் மாறிவருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வருகையால் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் என்ற பெருமையுடன் தோன்றிய கோயம்பேடு பேருந்து நிலையம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

முன்பு சென்னை பாரிஸ் கார்னரில் தான் வெளியூர் பேருந்துகள் வந்து செல்வதற்கான பேருந்து நிலையம் இருந்தது. அண்ணா சாலை வழியாகவே இந்த பேருந்து நிலையத்திற்கு நகரப் பேருந்துகள் இருந்தன. அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததன் எதிரொலியாக, 2003ஆம் ஆண்டில் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தது. அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கோயம்பேடு பேருந்த நிலையம் உதவியது. கொத்தவால் சாவடியில் இருந்த மார்க்கெட்டும் கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. கோயம்பேடு நகரின் மையப்பகுதியாக இருப்பதால், வடசென்னை மற்றும் தென்சென்னை ஆகிய இரு பகுதிகளில் இருந்தும் பேருந்து நிலையம் செல்ல வசதியாக இருக்கிறது. காலப்போக்கில் ஜவஹர்லால் நேரு சாலையில் போகுக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.

ஜிஎஸ்டி சாலை அதைவிட கடுமையான மோசமான வாகன நெரிசலை சந்தித்து வருகிறது. குரோம்பேட்டையில் இருந்து துரைப்பாக்கம் செல்ல மேம்பாலம் வந்த பின்பும், போக்குவரத்து நெரிசலில் திணற வேண்டி இருக்கிறது. ஈபக் ஹவர் நேரங்களில் வாகனங்களை ஓட்ட இயலாத அளவுக்கு போக்குவரத்து அதிகமாகி இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு முடிவு காண்பதற்காக தமிழக அரசு வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டது. அதன்படி, 2018ஆம் ஆண்டு அதற்கான பணிகள் தொடங்கின. ரூ.397 கோடி செலவில் 88.52 ஏக்கர் பரப்பில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது உருவாகியுள்ளது.

இந்தநிலையில், கலைஞர் நூற்றாண்டை ஒட்டி கட்டப்பட்டுள்ள இந்தப் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கோயம்பேடு மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. புறநகர் பேருந்து நிலையத்தில் 130 அரசுப் பேருந்துகள், 85 ஆம்னி பேருந்துகளை நிறுத்து வசதி உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 2,310 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சனிக்கிழமை நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. SETC, TNSTC, PRTC மற்றும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு 70V, 70C, 104CCT பேருந்து 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்துக்கு 55V, M18 எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்டும். கிளாம்பாக்கத்தில் இருந்து வேளச்சேரிக்கு 91R எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

கிளாம்பாக்கத்தில் இருந்து கிண்டிக்கு 18ACT எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூருக்கு 95X எண் கொண்ட பேருந்து 8 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து அடையாறு இடையே 99X எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து பிராட்வே இடையே 21G எண் கொண்ட பேருந்து 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement