முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’நீங்கள் இருந்தால் எங்கள் இறையாண்மை பாதிக்கிறது’..!! இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றிய மாலத்தீவு அரசு..!!

05:43 PM May 10, 2024 IST | Chella
Advertisement

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து இந்திய வீரர்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் ஏழாம் பொருத்தம் நீடித்து வருகிறது. இதற்கு காரணம் அதிபர் முகமது முய்ஜுவின் சீன ஆதரவு நிலைப்பாடுதான். அதிபராக பொறுப்பேற்றp பின், சீனாவின் பேச்சை கேட்டு, இந்தியா உடனான உறவை கொஞ்சம் கொஞ்சமாக முறிக்க தொடங்கியுள்ளது. அதாவது, மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன.

இதனை பராமரிக்கவும், இயக்கவும் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவ சுமார் 90 இந்திய ராணுவ வீரர்கள் அங்கு இருந்தனர். ஆனால், இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை பாதிப்பதாக கூறி அனைவரையும் வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முகமது முய்ஜு உத்தரவிட்டார். இது இவரது தேர்தல் வாக்குறுதியில் ஒன்று. அதாவது, "இந்திய ஆதரவு என்பதை மாற்றி சீன ஆதரவு நிலைப்பாடு என்பதை நோக்கி மாலத்தீவு நகரும். நான் ஆட்சிக்கு வந்தால், இந்திய ராணுவ வீரர்கள் நமது மண்ணில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

இது அந்நாட்டு மக்களை வெகுவாக ஈர்த்தது. ஆகையால், அவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தான், ராணுவ வீரர்களை வெளியேற்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே 10ஆம் தேதிக்குள் அனைத்து வீரர்களையும் இந்தியா திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அனைத்து இந்திய வீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக மாலத்தீவு அதிபரின் அலுவலக தலைமை செய்தித் தொடர்பாளர் ஹீனா வலீத் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு பதிலாக இந்தியா கொடுத்துள்ள விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் பராமரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர, இந்தியாவுடன் போடப்பட்ட 'ஹைட்ரோகிராஃபிக் சர்வே' ஒப்பந்தத்தை புதுப்பிக்க போவதில்லை என்றும் மாலத்தீவு தெரிவித்திருந்தது. அதாவது மாலத்தீவில் உள்ள நீர்நிலைகள், பாறைகள், கடற்கரையோரங்கள், கடல் நீரோட்டங்கள் மற்றும் அலை அளவுகள் ஆகியவற்றைப் பற்றி விரிவான ஆய்வை நடத்துவதே 'ஹைட்ரோகிராஃபிக் சர்வே' ஒப்பந்தமாகும்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், தற்போது மாலத்தீவு அரசு இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க போவதில்லை என்று கூறிவிட்டது. இதற்கெல்லாம் ஹைலைட்டாக சீன உளவு கப்பல்களுக்கு மாலத்தீவு தொடர்ந்து அனுமதி வழங்கி வருகிறது. இலங்கை இந்தி விவகாரத்தில் இந்தியாவின் பேச்சை கேட்கவில்லை. அந்த வரிசையில், தற்போது மாலத்தீவும் இணைந்திருப்பது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Read More : கே.எல்.ராகுலை வசைபாடிய சஞ்சீவ் கோயங்கா..!! சொத்து மதிப்பு ரூ.28,390 கோடி..!! இவர் யார் தெரியுமா..?

Advertisement
Next Article