யூரிக் ஆசிட் பிரச்சனை இருக்கா? அறிகுறிகள் இதுதான்.. இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க..!!
நமது இரத்தத்தில் யூரிக் என்கிற அமிலம் உள்ளது. இது சரியான அளவில் உடலில் உற்பத்தி ஆகும்போது எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் சில நேரங்களில் இது அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் உடலில் பல ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படுகின்றன, எனவே எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதை சரி செய்ய என்ன செய்யலாம் என விரிவாக பார்க்கலாம்.
நாம் உண்ணும் உணவுகளிலுள்ள "ப்யூரின்" என்ற சேர்மமானது ஜீரணிக்கும்போது யூரிக் அமிலம் உற்பத்தியாகிறது.. இது நம்முடைய உடலிலிருந்து வெளியேற வேண்டிய கழிவாகும். பெரும்பாலும், சிறுநீரின் மூலமே, இந்த யூரிக் அமிலம் வெளியேற்றப்படுகிறது..
அதாவது, நம்முடைய கல்லீரலில் சுரக்கும் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேற்றம் செய்யப்படும் யூரிக் அமிலத்தின் அளவு சீரானதாக இருக்க வேண்டும். அதாவது, ஒரு சாதாரண நபருக்கு யூரிக் அமிலம் ஒரு டெசிலிட்டருக்கு 3.5 முதல் 7.2 மில்லிகிராம் வரம்பில் இருக்க வேண்டுமாம்.. இந்த அளவை தாண்டினால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வந்துவிடும்.
பக்க விளைவுகள் ; நீடித்த மன அழுத்தமானது உடலில் பல்வேறு வகையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதிக மன அழுத்தம், போதுமான அளவில் ஓய்வு இல்லாமை மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்றவை உடலில் யூரிக் அமிலம் அதிகமாக காரணமாகின்றன. எனவே மன அழுத்தத்தில் இருந்து விடுப்பட அமைதியான யோகா முறையை பின்பற்றலாம். மேலும் மன அழுத்தம் காரணமாக உங்களுக்கு தூங்குவதில் சிரமம் உள்ளது எனில் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
உடலில் உற்பத்தி செய்யும் அளவை விட, வெளியேறும் யூரிக் அமிலத்தின் அளவு குறைவாகும்போது, இவை உடலில் குறிப்பாக மூட்டுகளுக்கு இடையில் தேங்கி நின்று, வலியையும், வீக்கத்தையும் உண்டுபண்ணிவிடும்.. யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருந்தால் கீழ்வாத பிரச்சனையை உண்டாக்கிவிடும்.. அத்துடன், சிறுநீரகத்தில் கல், சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்... எலும்புகள் பலவீனமாகி முறிவு ஏற்படுதல் போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம்.
மதுப்பழக்கம் உள்ளவர்கள், இனிப்பு அதிகம் சாப்பிடுபவர்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடிமேட் உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு உடலில் ப்யூரின் அளவு அதிகரிக்க செய்யலாம். அன்னாசி, சப்போட்டாவிலும் யூரிக் அளவை அதிகரிக்க செய்துவிடும்.
அதிக யூரிக் அமிலத்தின் அறிகுறிகள் : உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் அது நமக்கு எளிதில் தெரியாது. எனவே சில அறிகுறிகள் மூலம் நாம் அவற்றை கண்டறிய முடியும். அதிக யூரிக் அமிலமானது சிலருக்கு கீல்வாதத்தை ஏற்படுத்துகிறது, இதனால் மூட்டுகளில் வீக்கம் அல்லது வலி ஏற்படலாம். மேலும் அதிக அளவு யூரிக் அமிலமானது சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்தும், இது முதுகுவலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் இரத்தம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.
யூரிக் அமிலத்தை அதிகமாகாமல் தடுப்பது எப்படி?
அதிக யூரிக் அமிலத்தை மருத்துவ முறைகளை கொண்டு நிர்வகிக்க முடியும். இதற்கு சில மருந்துகள் உதவுகின்றன, இவை வலி மிகுந்த சிகிச்சை முறையாக இருக்கும், ஆனால் அவை உடலில் யூரிக் கற்களை கரைக்கிறது. சிலருக்கு பல நாள்களுக்கு இந்த சிகிச்சை முறை தேவைப்படலாம்.
உடல் பருமன் உள்ளவர்களுக்கு அதிக யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த எடையை இழக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை செய்வதன் மூலம் அதிக யூரிக் அமிலம் காரணமாக ஏற்படும் மூட்டு வலிகளை சரி செய்ய முடியும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் : நாம் உண்ணும் பல உணவுகளில் ப்யூரின் அதிகமாக உள்ளன. நமது உடலுக்கு நன்மை பயக்கும் வகையில் குறைந்த ப்யூரின் கொண்ட உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பன்றி இறைச்சி, உறுப்பு இறைச்சிகள், வான்கோழி, சில வகை மீன்கள் மற்றும் கடல் உணவுகளில் ப்யூரின்கள் அதிகமாக உள்ளன.
வறுத்த உணவுகள் மற்றும் அதிக கொழுப்பு கொண்ட பால் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளில் ப்யூரின்கள் அதிகமாக உள்ளன. எனவே அவற்றை தவிர்க்க வேண்டும், மேலும் ஆல்கஹால் பானங்கள், சோடா, பழச்சாறு போன்ற இனிப்பு பானங்கள் ஆகியவற்றிலும் ப்யூரின்கள் அதிகமாக உள்ளன.
Read more ; கடத்தியவரை பிரிய மனமில்லாமல் கதறி அழும் குழந்தை..!! – நெகிழ்ச்சி சம்பவம்