முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

OTT | ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய ஓடிடி தளங்கள், சமூக வலைதளங்கள் முடக்கம்..!! ஆப்பு வைத்த மத்திய அரசு..!!

01:53 PM Mar 14, 2024 IST | 1newsnationuser6
Advertisement

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 10 செயலிகள் மற்றும் 57 வலைதள பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

வளர்ந்து வரும் உலகத்தில் தொழில்நுட்பம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் நபர்கள், தொடர்ந்து அவதூறு மற்றும் ஆபாசமான செயல்களை கையில் எடுத்து சமூகத்தை சீரழித்து வருகின்றனர். ஆபாச காட்சிகளை ஒரு சில ஓடிடி தளங்கள், சமூக வலைதள பக்கங்களில் ஒளிபரப்பி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு எச்சரிக்கைகளுக்குப் பின்னும் ஆபாசமான மற்றும் மோசமான உள்ளடக்கத்தை வெளியிட்டு வந்த 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதள பக்கங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவை மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் பெண்கள் பாதுகாப்பு உட்பட சட்ட விதிகளின் கீழ் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முகநூல் பக்கத்தில் 12 கணக்குகள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 கணக்குகள், எக்ஸ் தளத்தில் 16 கணக்குகள், யூடியூபில் 12 கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஓடிடி தளங்களை பொறுத்தமட்டில் டிரீம் பிலிம்ஸ், வூவி, யெஸ்மா, அன்கட் ஆடா, ட்ரை ஃபிளிக்ஸ், எக்ஸ் பிரைம், நியான் எக்ஸ், விஐபி பேஷரம்ஸ், ஹன்டர்ஸ், ரேபிட் எக்ஸ்ட்ராமூட், நியூஃப்லிக்ஸ், மூட்எக்ஸ், மொஜிப்பிலிஸ், ஹாட் ஷாட்ஸ் விஐபி, ஃபியூகி, சிகூஃப்லிக்ஸ், பிரைம் ப்ளே ஆகியவை அடங்கும்.

Read More : Ramadan Fasting | நோன்பு திறக்கும்போது சாப்பிட வேண்டிய உணவுகள்..!! இது ரொம்ப முக்கியம்..!!

Advertisement
Next Article