நெகட்டிவ் விமர்சனம்.. பாக்ஸ் ஆபிஸில் ஃபிளாப்.. ஆனாலும் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா..! 7 இந்திய படங்கள் லிஸ்ட்ல இருக்கு..
97வது ஆஸ்கர் விருது விழா இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், ஆஸ்கர் விருதுக்கு தகுதியான 323 திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 207 படங்கள் தகுதி பெற்றுள்ளன. இதில் சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா உட்பட, 7 இந்திய படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
7 இந்திய படங்கள் என்னென்ன?
சிறந்த படங்கள் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தியப் படங்களின் பட்டியலில் 'கங்குவா' (தமிழ்), 'ஆடுஜீவிதம்' (தி ஆடு லைஃப்) (இந்தி), 'சந்தோஷ்' (இந்தி), 'ஸ்வதந்திர வீர் சாவர்க்கர்' (ஹிந்தி), 'ஆல் வீ இமேஜின் அஸ் லைட்' (மலையாளம்-ஹிந்தி), 'கேர்ள்ஸ் வில் பீ கேர்ள்ஸ் (ஹிந்தி-ஆங்கிலம்), and 'புடுல்' (பெங்காலி) ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு படங்களில் இந்தியாவில் இருந்து 7 படங்கள் தகுதி பெற்றுள்ளன. இந்த படங்கள் வெற்றி பெற அதிக வாக்குகளை பெற வேண்டும். ஜனவரி 8 முதல் 12 வரை இதற்கான வாக்குப்பதிவு நடைபெறும். பின்னர் எந்தெந்த படங்கள் தேர்வாகி உள்ளன என்பது ஜனவரி 17-ம் தேதி அறிவிக்கப்படும்.
ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 2, 2025 அன்று ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும். அனிமேஷன் குறும்படம், ஆவணப்படம், சர்வதேச அம்சம், லைவ் ஆக்ஷன் ஷார்ட், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், அசல் ஸ்கோர், அசல் பாடல், ஒலி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பத்து பிரிவுகளில் தேர்வான படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும்..
வியப்பில் ஆழ்த்திய கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான கங்குவா. இந்த படத்தில் திஷா படானி, பாபி தியோல், நட்டி, கருணாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஆனால் திரையரங்குகளில் வெளியான முதல் நாளே கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களைபெற்றது. இதனால் இந்த படம் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய தோல்விப் படமாக மாறியது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.100 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் கங்குவா படம் ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்ள உள்ளது சூர்யா ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான லாபட்டா லேடீஸ்' திரைப்படம் 97வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக தேர்ந்தெடுக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அது இறுதிப்பட்டியலில் இடம் பெறவில்லை. கிராமப்புற இந்தியாவில் ஆணாதிக்கத்தை பற்றி பேசிய இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் ஆஸ்கர் தேர்வு பட்டியலில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : Video : நடிகர் அஜித்தின் ரேஸ் கார் விபத்து.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..! ரேஸில் பங்கேற்பாரா?