முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆஸ்கர் விருதுகள் 2024!… ஆதிக்கம் செலுத்தும் ஓபன்ஹைமர்! பரிந்துரைகளின் முழு பட்டியல்..!

07:10 AM Jan 24, 2024 IST | 1newsnationuser3
Advertisement

2024 ஆம் ஆண்டிற்கான 96-வது ஆஸ்கர் விருது விழாவிற்கு ’ஓபன்ஹைமர், பார்பி’ உள்ளிட்ட திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கபட்டுள்ளது.

Advertisement

உலக சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் மிகப்பெரிய விழாவாக நடத்தபட்டு, தகுதியான படங்களை தேர்வு செய்து அதற்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2024 ஆம் ஆண்டிற்கான 96-வது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெற உள்ளது. இந்த ஆஸ்கர் விருது விழாவிற்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற ’ஓபன்ஹைமர், பார்பி’ உள்ளிட்ட திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக ‘ஓபன்ஹைமர்’ 13 விருதுகளுக்கும், ‘புவர் திங்ஸ்‘ 11 விருதுகளுக்கும், ‘Killers of the Flower Moon’ 10 விருதுகளுக்கும், ‘பார்பி’ 8 விருதுகளுக்கும், ‘Maestro’ படம் 7 விருதுகளுக்கான இறுதி பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன.

கிறிஸ்டோஃபர் நோலன் (Christopher Nolan) இயக்கி, கிலியன் மர்ஃபி, எமிலி ப்ளண்ட், ராபர்ட் டெளனி ஜூனியர், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பியூ ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். லுட்விக் கோரான்ஸன் இசையமைத்திருந்தார். புலிட்சர் விருது பெற்ற ‘American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer’ எனும் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தின் அரசியலை பேசும் படமாக அமைந்திருக்கிறது. பெரும் வரவேற்பை பெற்றது.

ஓபன்ஹைமர் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த கதாநாயகன் பிரிவில் நடித்த சிலின் முர்பி (Cillian Murphy), சிறந்த துணை கதாபாத்திரம் நடிகை பிரிவில் எமிலி ப்ளண்ட் ( Emily Blunt), அயர்ன் -மேன் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் ட்வுனி ஜூனியர் (Robert Downey Jr) உள்ளிட்ட பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது.

சிறந்த இயக்குநர், சிறந்த Adapted திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், சிறந்த தயாரிப்பு கலை, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஓபன்ஹைமர் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த இயக்குநர் நிஷா பஹுஜா இயக்கிய ‘To Kill a Tiger’ திரைப்படம் ‘சிறந்த ஆவணப்படம்’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படம் ஜார்கண்ட்டைச் சேர்ந்த இந்திய விவசாயி தன் வாழ்கையில் சந்திக்கும் பிரச்னைகளையும், கொடூரமான கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தனது 13 வயது மகளுக்கு நீதி கேட்டுப் போராடும் அவரது போராட்டத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ஏற்கெனவே பல விருதுகளை வென்ற இந்த ஆவணப்படம் ஆஸ்கரை வெல்லுமா என்று ரசிகர்களிடையை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த திரைப்படம்: அமெரிக்கன் ஃபிக்சன் (American Fiction), அனடாமி ஆஃப் ஃபால் (Anatomy of a Fall), பார்பி (Barbie), தி ஹோல்டோவர்ஸ் (The Holdovers), கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers of the Flower Moon), மாஸ்ட்ரோ (Maestro), ஓபன்ஹைமர் (Oppenheimer), பாஸ்ட் லைவ்ஸ் (Past Lives), புவர் திங்ஸ் (Poor Things), The Zone of Interest.

சிறந்த நடிகர்கள்: ப்ராட்லி கூப்பர் – மாஸ்ட்ரோ (Maestro, கால்மென் டாமிங்கோ – ரஸ்டின் (Rustin), பால் கியாமாட்டி – தி ஹோல்டோவர்ஸ் (The Holdovers), சிலியன் முர்பி – ஓபன்ஹைமர் (Oppenheimer) ஜெஃப்ரெ ரைட் – அமெரிக்கன் ஃபிக்சன் (American Fiction).

சிறந்த நடிகைகள்: ஆன்டே பெனிங் – நைட் (Nyad, லில்லி க்ளாட்ஸ்டோன் – கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers of the Flower Moon), சான்ரா ஹூலர் – அனடாமி ஆஃப் ஃபால் (Anatomy of a Fall), காரே முலிகன் – மாஸ்ட்ரோ (Maestro), எம்மா ஸ்டோன் – புவர் திங்க்ஸ் (Poor Things).

சிறந்த இயக்குநர்கள்: ஜஸ்டின் ட்ரைட் -அனடாமி ஆஃப் ஃபால், மார்ட்டின் ஸ்கோர்செஸ் – கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன், கிறிஸ்டோபர் நோலன் – ஓபன்ஹைமர், யோர்கோஸ் லாந்திமோஸ் – புவர் திங்க்ஸ்ஜொனாதன் கிளேசர் – The Zone of Interest.

Tags :
nominationOscars 2024ஆதிக்கம் செலுத்தும் ஓபன்ஹைமர்ஆஸ்கார் விருதுகள் 2024
Advertisement
Next Article