இராமாயணம் படத்தில் இணையும் ஆஸ்கர் நாயகர்கள்… ஹான்ஸ் ஜிம்மருடன் AR ரஹ்மான்!
நிதிஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன், ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதிஷ் திவாரி இயக்ககத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து புதிய படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாக நடித்து வருகின்றனர். கன்னட நடிகர் யஷ் ராவணனாக வருகிறார். இந்த படத்தில் அனுமானாக நடிக்க சன்னி தியோல், கும்பகர்ணனாக நடிக்க பாபிதியோல் ஆகியோரை அணுகி பேசி வருகிறார்கள்.
மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ராமாயணம் படம் மூன்று பாகங்களாக உருவாக உள்ளது. ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எடுக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளது. இந்நிலையில், ஜெர்மனியை சேர்ந்த இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் ராமாயணம் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து இசையமைக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த 66 வயதான ஹான்ஸ் ஜிம்மர் 1980 ஆம் ஆண்டு முதல் இசையமைத்து வருகிறார். இவர் 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆஸ்கர் விருதினை 2 முறையும், கிராமிய விருதினை 4 முறையும், கோல்டன் குளோப் விருதினை 3 முறையும் பெற்றுள்ளார்.
இதன் மூலம் இரண்டு ஆஸ்கார் வெற்றியாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர். ஹான்ஸ் ஜிம்மர் இந்திய படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.