ஆஸ்கார் 2024: 10 பிரிவுகளில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்ட ஆஸ்கார் குழு.! இந்திய ரசிகர்கள் சோகம்.!
உலக அளவில் சினிமா கலைஞர்களுக்கான உயரிய அங்கீகாரமாக கருதப்படுவது ஆஸ்கார் விருதுகள் ஆகும். 96 ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் வருகின்ற மார்ச் மாதம் பத்தாம் தேதி டால்பி தியேட்டரில் வைத்து நடைபெற இருக்கிறது.
இந்த விருதுகள் வழங்கும் விழாவிற்காக சர்வதேச தரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்களை ஆஸ்கார் விருது கமிட்டி வெளியிட்டு இருக்கிறது. இந்த கமிட்டி பத்தி பிரிவுகளின் கீழ் 142 படங்களை தேர்வு செய்துள்ளது. இந்தத் திரைப்படங்களை ஆஸ்கார் விருதுகளுக்கு தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு வருகின்ற ஜனவரி மாதம் 11-ம் தேதியிலிருந்து 16-ம் தேதி வரை நடைபெறும் என ஆஸ்கார் கமிட்டி தெரிவித்து இருக்கிறது.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றி அறிவிப்பு ஜனவரி 24ஆம் தேதி வெளியாகும் எனவும் ஆஸ்கார் கமிட்டி தெரிவித்திருக்கிறது. இந்த வருடம் வெளியாகி சர்வதேச அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒப்பன்ஹய்மர், கில்லர்ஸ் ஆப் த ஃப்ளவர் மூன், பார்பி தி கலர் பர்பிள் ஆகிய திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருது போட்டியில் இடம் பெற்றிருக்கிறது.
கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்கார் விருதில் பான் இந்திய திரைப்படமான ஆர்ஆர்ஆர் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் நடைபெற இருக்கின்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஒரு இந்திய திரைப்படம் கூட இடம் பெறவில்லை என்பது இந்திய சினிமா ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது.