முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றது செல்லும்..!! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

10:41 AM Dec 22, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

அந்த மனுவில், தொகுதி முழுவதும் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன், 60 கோடி ரூபாய் அளவிற்கு பணப்பட்டுவாடா செய்துள்ளதாகவும், இரு வேறு சமூக மக்களிடையே விரோதத்தை தூண்டியும் தெரிவித்துள்ளார். மேலும், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சுமார் 7,000 பேருக்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்து ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி தண்டபாணி விசாரித்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேதாரண்யம் தொகுதி சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tags :
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புதிமுக வேட்பாளர் வழக்குமுன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்வேதாரண்யம் தொகுதி
Advertisement
Next Article