For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"நடிகை தேர்வு" ஒரே மேடையில் 10 ஆண்களை முத்தமிடச் சொன்னார்கள் - ஹாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் ஓபன் டாக்

06:00 AM Apr 27, 2024 IST | shyamala
 நடிகை தேர்வு  ஒரே மேடையில் 10 ஆண்களை முத்தமிடச் சொன்னார்கள்   ஹாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் ஓபன் டாக்
Advertisement

நடிகை தேர்வுக்காக சென்றிருந்தபோது, ஒரே மேடையில் 10 ஆண்களை முத்தமிடச் சொன்னதாகவும், அது மிகவும் மோசமான தருணம் எனவும் ஹாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் அன்னே ஹாத்வே வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகை அன்னே ஹாத்வே, அமெரிக்காவில் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, ஹாலிவுட் படங்களில் நடிக்க வந்த புதிதில் பல்வேறு சிரமங்களை, தான் எதிர்கொண்டதாக தெரிவித்தார்.

Advertisement

ஹாலிவுட் உலகில் நடிகர் -நடிகையர் இடையே ’கெமிஸ்ட்ரி’ ஒர்க்-அவுட் ஆவதற்காக ஷூட்டிங் போவதற்கு முன்பு இருவரும் சகஜமாக பழகிக் கொள்ளுமாறு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கூறுவது இயல்பான ஒன்று என தெரிவித்துள்ளார்.

மேக்-அவுட் எனப்படும் அந்த நடைமுறை தவறானது இல்லை என்றாலும், 2000களில் தான் நடிக்க வந்தபோது, ஒரே நேரத்தில் 10 ஆண்களுக்கு முத்தம் கொடுக்க வைத்ததாகவும் கூறியுள்ளார். அது தனக்கு மிகவும் சங்கடத்தை கொடுத்தாலும், வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அதை செய்ததாகவும் அன்னே ஹாத்வே தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அண்மையில் வெளியான ‘தி ஐடியா ஆஃப் யூ’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தயாரிப்பாளரான அன்னே ஹாத்வேயின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 660 கோடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

MS Dhoni | ” மேட்ச் நடக்கிற நாள்ல தோனி லேட்டா தான் எழும்புவார்; அதுக்கும் ஒரு காரணம் இருக்கு…” ருத்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்யமான விஷயம்.!!

Tags :
Advertisement