மகிழ்ச்சி செய்தி...! மதிப்பூதியம் ரூ.20,000 லிருந்து ரூ .25,000 ஆக உயர்த்தி அரசாணை...!
சிறப்பு பயிற்றுநர்கள் மதிப்பூதியம் ரூ.20,000 லிருந்து ரூ .25,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொடக்கக் கல்வி நிலையில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் மதிப்பூதியம் ரூ.20,000 லிருந்து ரூ .25,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநிலத் திட்ட இயக்குநர் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் ( தொடக்கக் கல்வி ) சங்கத்தின் சார்பில் தங்களது மதிப்பூதியத்தினை ரூ .20,000 -லிருந்து ரூ .25,000 ஆக உயர்த்தி வழங்கிடவும் , காலமுறை ஊதியம் வழங்கிடவும் , பணியினை நிரந்தரம் செய்திடவும் தொடர்ந்து கோரிக்கைகள் அளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மாற்றுத்திறன் மாணவ , மாணவிகளின் நலன் கருதி , குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 இன்படி , மாற்றுத்திறனுடைய பள்ளி வயதில் உள்ள அனைத்து மாணவ , மாணவிகளும் அருகாமையில் உள்ள பள்ளியில் சேர்க்கை அளித்தும் அவர்களின் மாற்றுத்திறன் தன்மையை பொறுத்து அவர்களுக்கான சிறப்புக் கல்வியும், பயிற்சிகளும் சிறப்பு பயிற்றுநர்களால் ஆயத்த பயிற்சி மையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் தொடக்கக் கல்வி நிலையில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் மதிப்பூதியம் ரூ.20,000 லிருந்து ரூ .25,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.