முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு... ரேஷன் கடைகளில் 100 % பொருட்கள் முன் நுகர்வு...!

Orders flown to the authorities... 100% pre-consumption of goods in ration shops.
07:06 AM Jun 26, 2024 IST | Vignesh
Advertisement

ஜூலை-2024 முதல் செப்டம்பர் 2024 வரை மாதங்களுக்கான குடிமைப் பொருட்கள் தேவையின் அடிப்படையில் 100% முன் நுகர்வு செய்யப்பட வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான நான்காம் காலாண்டு மற்றும் 2024-ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டு மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்குழுகூட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு சட்டம் 2017-ன்படி பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்தும், தரமான பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும் எண்ணெய் மற்றும் பருப்பு உரிய காலத்திற்குள் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கொண்டு சென்று விநியோகம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் ஜுன் 2023-மாதம் முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ இராகி வழங்கப்பட்டு வருகிறது எனவும், அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் அத்தியாவசிய பொருட்களின் ஜூலை-2024 முதல் செப்டம்பர் 2024 வரை மாதங்களுக்கான குடிமைப் பொருட்கள் தேவையின் அடிப்படையில் 100% முன் நுகர்வு செய்யப்பட வேண்டும் எனவும், தரம் மற்றும் எடையளவு சரியாக உள்ளதை உறுதி செய்ய துறை அலுவலர்களுக்கு அறிவுத்தப்பட்டது.

Tags :
dharmapuri dtrationration shop
Advertisement
Next Article