முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்று 5 மாவட்டங்களில் அரெஞ்சு அலெர்ட்...!

06:54 AM May 23, 2024 IST | Vignesh
Advertisement

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் அரெஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு, மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-ம் தேதி மாலை நிலவக்கூடும்.

Advertisement

தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதற்காக, அந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Advertisement
Next Article