தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலெர்ட்..!! மக்களே உஷார்..!! மிக கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களுக்கு 22,23 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களுக்கு 22, 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில், வரும் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அன்றைய தினங்களில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.