2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!! இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இம்முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்தாண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு நிலவுவதால் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று காலை விடுக்கப்பட்டுள்ள வானிலை அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 6ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில் இன்று தொடங்கி 7ஆம் தேதி வரை அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More : பைப்பை திறந்தாலே தண்ணீர் கொதிக்கிறதா..? எப்போதும் குளிர்ச்சியாக இருக்க இதை டிரை பண்ணுங்க..!!