முடிவுக்கு வருகிறது ஓபிஎஸ் அரசியல்..!! கடைசி நேரத்தில் அல்வா கொடுத்த அண்ணாமலை..!! ஒரு சீட் கூட இல்லை..!!
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு தேதிகளில் நடைபெறவுள்ளன. தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பையொட்டி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் கூட்டணிப் பங்கீடு குறித்து தீவிரமாக பேசி வருகின்றன. ஒருவழியாக, அனைத்துக் கட்சிகளிலும் தொகுதி பங்கீடுகள் முடிவுக்கு வந்துள்ளன.
இதற்கிடையே பாஜகவுடன் பாமக, அமமுக, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளன. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அமமுகவுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதேநேரத்தில், த.மா.கா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இழுபறியில் இருந்து வந்தது. இந்நிலையில், அதுகுறித்த உடன்பாடும் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
அந்தவகையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்தத் தொகுதிகளும் ஒதுக்கப்படவில்லை. த.மா.காவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, பாஜகவுடன் கூட்டணிப் பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு நிறைவுபெற்றதையடுத்து, பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முன்னதாக, புதிய நீதிக்கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
பாஜக - 20
பாமக - 10
த.மா.கா - 3
அ.ம.மு.க. - 2
புதிய நீதிக்கட்சி - 1
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - 1
இந்திய ஜனநாயக கட்சி - 1
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் - 1
இதில் 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.