முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"சசிகலா, தினகரனுடன் சந்திப்பு எப்போது.?" ஓபிஎஸ் கொடுத்த முக்கிய தகவல்.!

07:18 PM Feb 18, 2024 IST | 1newsnationuser7
Advertisement

2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைந்து பயணிக்கிறது. மற்றொருபுறம் அதிமுக தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. மூன்றாவது அணியாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

Advertisement

அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக உரிமையை மீட்பு குழு என்ற பெயரில் தங்களது இழந்த உரிமையை மீட்க போராடி வருகிறார். இந்நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணை இருக்கிறது. இது தொடர்பாக பேசிய ஓபிஎஸ் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை வழங்கிய பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு தங்களது கட்சி உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடனும் கூட்டணி அமைப்பது பற்றி பேசிய அவர் விரைவிலேயே சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்திக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். விரைவிலேயே சசிக்கலாம் மற்றும் தினகரனுடன் சந்திப்பு நிகழும் என்ன தெரிவித்த ஓபிஎஸ் தேர்தல் கூட்டணி பற்றி இப்போது விவரிக்க முடியாது என தெரிவித்து இருக்கிறார் விரைவிலேயே தங்கள் அணி அமையும் என குறிப்பிட்ட அவர் வெற்றிக்கான அணியை அமைப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் .

English Summary

O.Panneerselvam talks about meeting TTV Dhinakaran and Sasikala. He told that will meet them at the right time.

Tags :
ADMKOPS̓Politicssasikalattv dhinakaran
Advertisement
Next Article