Election: சிவகங்கை தொகுதியில் OPS போட்டி...! கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் விருப்பமனு...!
சிவகங்கை தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட வேண்டுமென அக்குழுவின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் விருப்பமனு அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை மக்களவைத் தேர்தலுக்கு தங்களைத் தயார்படுத்தி வருகின்றன. இதில் திமுக தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு நடைபெற்ற முடிந்தது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனுக்களை வழங்கலாம் என இரு கட்சிகளும் அறிவித்து இருந்தன. இரண்டு நாட்கள் முன்பு அதிமுக மற்றும் திமுகவின் விருப்ப மனுக்கள் பெறப்படும் காலம் முடிவடைந்தது. அதிமுக சார்பில் 2,475 பேரும், திமுக சார்பில் 2,984 பேரும் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
திமுகவை பொருத்தவரை முக்கிய நபர்களாக தற்போதைய எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோரும், கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, சபாநாயகர் அப்பாவின் மகன் அலெக்ஸ் உள்ளிட்டோரும் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். இதேபோல் அதிமுகவிலும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் விருப்பம் மனுக்களை அளித்துள்ளனர். விருப்பமான வழித்தவர்களுக்கு நேற்று முதல் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு வழங்கும் நிகழ்வு சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. சிவகங்கை தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட வேண்டுமென அக்குழுவின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் விருப்பமனு அளித்துள்ளார்.