PM MODI: "புனித மாதத்தில் எதிர்க்கட்சியினர் அசைவம் சாப்பிடுகிறார்கள்"… மனம் வருந்திய மோடி.!
PM MODI:18-வது பாராளுமன்ற பொது தேர்தல் இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஏழு கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் வாக்குப்பதிவிற்கான நாள் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பிரதமர் மோடி(PM MODI) நாடெங்கிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் சென்னையில் நடைபெற்ற வாகன பேரணியில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இதனைத் தொடர்ந்து நாக்பூர் சென்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய பிரதமர் எதிர்க்கட்சியினரின் செயல் தனது மனதை வருத்தமடைய செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
புனிதமான ஷரவான் மாதத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் அசைவம் சாப்பிடுவது போன்ற போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவிடுகின்றனர். இது எனது மதனதை மிகவும் பாதித்துவிட்டது என வருத்தமுடன் மோடி தெரிவித்திருக்கிறார். இது எதிர்க்கட்சியின் அருமை மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சியினர் 75% அசைவம் சாப்பிடுபவர்கள் வாழும் நாட்டில் யாரை திருப்திப்படுத்துவதற்காக பிரதமர் மோடி இவ்வாறு பேசுகிறார் என எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர்.