OPINION POLLS| "சொல்லி அடிக்கும் மோடி" மீண்டும் பாஜக ஆட்சி... வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.!
OPINION POLLS: புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி(Modi) தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு போன்றவற்றில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய பிரதமர் மோடி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நான் ஒரு தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிக அர்ஜுனா கார்கே பாரதிய ஜனதா கட்சியால் 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடியாது என தெரிவித்திருந்தார் . பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் மார்ச் 13ஆம் தேதிக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலைப் பற்றிய கருத்துக் கணிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது . இந்நிலையில் 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் இந்தக் கட்சி அதிக வாக்குகளை பெறும் என்பது தொடர்பாக புதிய தலைமுறை செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்தக் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் வர இருக்கின்ற பொதுத் தேர்தலில் அதிக அளவிலான வாக்குகளைப் பெற்று மீண்டும் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்கும் என்ற முடிவு வெளியாகி இருக்கிறது.
இந்த வாக்குப்பதிவில் பாரதிய ஜனதா கட்சி 45.64% வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 19.34% சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் திமுக இருக்கிறது. தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக 2.38% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் பாரதிய ஜனதா 364 முதல் 374 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என வெளியாகி இருக்கிறது.
இவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 50-55 இடங்களைப் பெற்று இரண்டாம் இடத்தை பெறுகிறது. திமுக 29-31 இடங்களைப் பெற்று இந்திய அளவில் மூன்றாம் இடம் பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் பிரதமர் மோடியே மூன்றாவது முறையும் பிரதமராக வருவார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.