முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Election 2024: ஆபரேஷன் தமிழ்நாடு.!! 4 ரோடு ஷோ, 1 பொதுக்கூட்டம்.!! பக்கா பிளானுடன் களமிறங்கும் அமித் ஷா.!!

07:40 PM Apr 03, 2024 IST | Mohisha
Advertisement

Election 2024: நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக-வின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு புதிய திட்டத்துடன் களம் இறங்க இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல்(Election) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் முதல் கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வலுவான ஆதரவு இருப்பதாக தெரிகிறது.

இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த தீவிரமாக போராடி வருகிறது. வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க அந்தக் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் .

இந்நிலையில் பாரதிய ஜனதா அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். நாளை தமிழகம் வரும் அவர் இரண்டு நாட்கள் தமிழகத்தில் பாஜகவில் தோழர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா சென்னை மதுரை மற்றும் சிவகங்கை பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சுற்றுப் பயணத்தின் போது 4 ரோடு ஷோ மற்றும் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் இந்த பிரம்மாண்ட திட்டத்துடன் அமித்ஷா தமிழகம் வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Read More: முதுகு வலியா..? அப்போ கண்டிப்பா நீங்க செய்ய வேண்டியது இதுதான்..!

Advertisement
Next Article