For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆபரேஷன் சக்சஸ்!. லெபனானை உலுக்கிய பேஜர் தாக்குதல்!. ஆர்டர் போட்டதே நான் தான்!. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அதிரடி!

Operation Success!. Pager attack that shook Lebanon! I am the one who placed the order! Israeli Prime Minister Netanyahu action!
09:50 AM Nov 11, 2024 IST | Kokila
ஆபரேஷன் சக்சஸ்   லெபனானை உலுக்கிய பேஜர் தாக்குதல்   ஆர்டர் போட்டதே நான் தான்   இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அதிரடி
Advertisement

Netanyahu: பாலஸ்தீனம் மீது போர் தொடுத்து கடந்த 13 மதங்களாக தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு அண்டை நாடான லெபனானில் இருந்தபடி செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு கடும் நெருக்கடியைத் தந்து வந்தது. லெபனான் எல்லையில் இருந்தபடி இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா அவ்வப்போது வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தது.

Advertisement

இதனால் ஹிஸ்புல்லா மீதான அதிரடி தாக்குதலுக்கு இஸ்ரேல் திட்டம் டீ தீட்டி வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அனைவரையும் அதிரவைத்த அந்த சம்பவம் நடந்தது. லெபனான் முழுவதிலும் பரவி உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற கருவிகளான பேஜர் கருவிகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லாவின் பாக்கெட்டுகளில் இருந்த கருவிகள் வெடித்தன. இதில் சுமார் 3000 பேர் படுகாயமடைந்தனர். 40 பேர் பலியாகினர். பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு மின் சாதனங்களும் வெடித்தன. இதனால் ஹிஸ்புல்லா கடும் பாதிப்பை சந்த்தித்தது.

தைவானில் உள்ள GO APPOLO நிறுவனத்திடம் இருந்து ஆர்டர்செய்து பிரத்தேயகமாக தயாரிக்கப்பட்ட இந்த பேஜர்கள் இந்த வருட தொடக்கத்தில் ஹிஸ்புல்லாவினரின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.மொபைல் போன்களில் தகவல்கள் கசியும் அபாயம் உள்ளதால் பேஜர் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தயாரிக்கப்படும்போதே இந்த பேஜர்களில் 3 கிராம் வெடிபொருள் வைக்கப்பட்டது என்றும் இதற்கு பின்னால் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட்டின் கை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல நாட்கள் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் ஹேக்கிங் மூலம் இந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பேஜர் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தாலும், இதுவரை வெளிப்படையாக எதுவும் உறுதி செய்யவில்லை. இந்நிலையில் இந்த பேஜர் தாக்குதலை நடத்தியது தங்கள் நாடுதான் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார். லெபனானில் நடத்திய பேஜர் தாக்குதல் ஆபரேஷனுக்கு தான் ஒப்புதல் வழங்கியதாக நேற்றைய தினம் நேதன்யாகு பொதுவெளியில் தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கு ஹிஸ்புல்லாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Readmore: இந்தியர்கள் ஒரு நாளைக்கு எத்தனை வேளை உணவு சாப்பிட வேண்டும்?. நிபுணர்கள் கூறுவது என்ன?

Tags :
Advertisement