For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டிச.30ல் திறப்பு!… அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அதிரடி மாற்றம்!… புதிய பெயரும்!… ஆச்சரியமான அர்த்தமும்!

02:17 PM Dec 29, 2023 IST | 1newsnationuser3
டிச 30ல் திறப்பு … அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அதிரடி மாற்றம் … புதிய பெயரும் … ஆச்சரியமான அர்த்தமும்
Advertisement

அயோத்தி கட்டப்பட்டுள்ள அதிநவீன ரயில் நிலையத்தை நாளை மறுநாள் பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ள நிலையில், அயோத்தி தாம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிஉள்ளது. இக்கோயில் வரும் ஜனவரி 22-ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அயோத்தியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய விமானநிலையம் மற்றும் அதிநவீன வசதிகளைக் கொண்ட ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம்தேதி திறந்து வைக்க உள்ளார்.

இதற்கிடையே, அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ரயில்வே சந்திப்பு (Ayodhya Railway Juction) என அந்த ரயில் நிலையத்துக்கு பெயர் இருந்த நிலையில் தற்போது அது அயோத்தி தாம் (Ayodhya Dham)என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்தின் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது Ayodhya Dham என்பது ராமர்-சீதையின் இருப்பிடத்தை குறிக்கும் சொல்லாக இருக்கிறது. தற்போது அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதால் அயோத்தி சந்திப்பு ரயில் நிலையத்தின் பெயரும் அயோத்தி தாம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
Advertisement