For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிரும் மதுரை..! 1,000 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..!

06:41 AM Jan 15, 2024 IST | 1Newsnation_Admin
அதிரும் மதுரை    1 000 காளைகள்  800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
Advertisement

தமிழர்களின் வீரத்தை நிரூபிக்கும் பாரம்பரிய விளையாட்டாக 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது ஜல்லிக்கட்டு. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் திநாளையொட்டி இன்று மதுரை மாவட்டத்தில் துவங்க இருக்கிறது. அதன்படி இன்றைய தினம் மதுரை அவனியாபுரத்தில் காலை 7மணிக்கு கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்த போட்டி மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக கலந்து கொள்ளும் காளைகளின் உரிமையாளர்களுக்கு qr code போட்டிருக்கக்கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மொத்தம் 1,000 காளைகள், 800 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சுற்றுக்கு தலா 75 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சற்று என்று அடுத்தடுத்த சுற்றுகள் நடைபெறவுள்ளது. சிறந்த மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சிறந்த மாடுபிடி வீரர்கள் மாற்றும் சிறந்த காளைகளின் உரிமையாளருக்கு தலா ஒரு கார்கள் வழங்கப்பட உள்ளன.

முக்கிய பிரமுகர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டிக்காக 2000க்கும் மேற்ப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 40 மருத்துவ குழுக்கள் மற்றும் 108 அம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவை பாதுகாப்பு காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிவாசலில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை தென்னை நார் பரப்பப்பட்டு உள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் நாடைபெற உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளதால் வெளிநாட்டு, உள்நாட்டு பார்வையாளர்களால் மதுரை மாவட்டமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

Tags :
Advertisement