OpenAI CEO சாம் ஆல்ட்மேன் ஒரே பாலின நண்பருடன் திருமணம்..! வாழ்த்துக்கள் தெரிவித்த பிரபலங்கள்..!
Chat gpt எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த OpenAI நிறுவனத்தின் தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டார்.
நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த பிரபல OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், Y Combinator இன் முன்னாள் தலைவருமான சாம் ஆல்ட்மேன், ஹவாயில் நடைபெற்ற அந்தரங்க விழாவில் தனது கூட்டாளியான Oliver Mulherin உடன் திருமணம் செய்து கொண்டார். அவரது அந்த திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தீவில் உள்ள ஆல்ட்மேனின் குடியிருப்புக்கு அருகாமையில் இந்த திருமண நிகழ்ச்சி நடந்தேறியது.
நண்பர்கள் மற்றும் மணமகன் மத்தியில் ஒல்லி என்று அன்பாக அறியப்பட்ட ஆலிவர் முல்ஹெரின் வெளி உலகத்திற்கு அவ்வளவு ஆக பரிட்சயம் இல்லாதவர். ஆல்ட்மேனுடனான அவரது தொடர்பு ஆழமாக வேரூன்றிய நட்பாக மாறியது. தங்களது இரு திருமணம் குறித்து எக்ஸ் தளத்தில்; எனது சிறந்த நண்பரையும் என் வாழ்க்கையின் காதலையும் திருமணம் செய்து கொண்டேன்" என்று ஆலிவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் வருங்கால மனைவி லாரன் சான்செஸ், தொழில்நுட்ப தொழில்முனைவோர்களான ஜென் மடோஷி, அலெக்சாண்டர் வாங், ஷெர்வின் பிஷேவர் என பல முக்கிய பிரபலங்களும் இவர்களது திருமணத்திற்கு தங்களது வாழ்த்துச் செய்திகளை பதிவு செய்து வருகின்றனர்.