OPEN AI அறிமுகப்படுத்தும் வாய்ஸ் இன்ஜின்.!! இந்தப் புரட்சிகரமான ஆடியோ கருவியின் சிறப்பம்சங்கள் என்ன.?
சாட் GPTயை(Chat GPT) உருவாக்கிய நிறுவனமான ஓபன் AI (OPEN AI) தற்போது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாய்ஸ் என்ஜின் என்ற புதிய கருவியை உருவாக்கி இருக்கிறது. இது தகவல் தொழில்நுட்பத்தின் மற்றொரு பரிணாமமாக பார்க்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி சிறப்பான துல்லியத்துடன் டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் கன்வர்சன் செய்ய முடியும். மேலும் இது துல்லியமான மனித குரல்களை பிரதிபலிக்கும் வசதியுடன் வருகிறது. இதில் 15 வினாடிகளுக்கு ஆடியோ இன்புட் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் என்ஜின் வெளியீட்டிற்கு முன்பாக கொள்கை வகுப்பாளர்கள், தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் படைப்பாளிகளை உள்ளடக்கிய பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்ற பிறகு வாய்ஸ் இன்ஜின் செயலியை கட்டுப்பாடுகளுடன் வெளியிட ஓபன் AI முடிவு செய்து இருக்கிறது.
முக்கியமாக தேர்தல் போன்ற சென்சிட்டிவான நிகழ்வுகள் நடைபெறும் நேரத்தில் ஒருவரது குரலைப் போன்றே துல்லியமாக பேச்சுக்களை உருவாக்குவதற்கு வாய்ப்பிருக்கும் அபாயத்தையும் அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
முந்தைய ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ஆடியோ உள்ளடக்கத்தை போல் இல்லாமல் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் வாய்ஸ் என்ஜின் ஒருவரின் குரலை நகலெடுப்பதற்கும் அப்பால் சென்று கேடன்ஸ் மற்றும் இன்டோனேஷன் போன்ற தனிப்பட்ட நுணுக்கங்களை துள்ளியமாக கைப்பற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பேச்சுக்களை கேட்கும் போது வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு துல்லியமாக மற்றொரு குரலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. எனவே இத்தகைய தொழில்நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை தேவை என ஓபன் AI தெரிவித்துள்ளது.
ஓபன் AI (OPEN AI) நிறுவனத்தின் பங்கீட்டாளர்கள் வாய்ஸ் இன்ஜின் பல்வேறு வகையான பயன்பாடுகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். நோயாளிகளின் குரலை மீட்டெடுப்பது முதல் spotity போன்ற நிறுவனங்களுக்கு பன்மொழி ஆடியோ உள்ளடக்கத்தை மேம்படுத்துவது வரை பல்வேறு வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.கல்வி உள்ளடக்கம் மற்றும் போட்காஸ்ட் மொழிபெயர்ப்பிற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும் பல்வேறு மொழிகளில் ஆடியோவை தடையின்றி மொழிபெயர்க்கும் திறனுடன் இந்த கருவி வருகிறது.
இந்த செயலியின் தவறான பயன்பாட்டை தவிர்ப்பதற்காக ஓபன் AI பல்வேறு விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.இதில் அசல் பேச்சாளரிடமிருந்து ஒப்புதல் பெறுதல் மற்றும் AI-உருவாக்கிய உள்ளடக்கத்தை கேட்பவர்களுக்கு வெளிப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.