முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அச்சச்சோ..!! இவர்களுக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்காதாம்..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

07:20 AM Jan 06, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சமீபத்தில் வெளியான அறிவிப்பில், 2.19 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும், அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்ப்ல் ரூ.1,000 இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசாக ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இந்த தொகை அனைவருக்கும் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த தொகையை பெற முடியும். மத்திய-மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
தமிழ்நாடு அரசுபொங்கல் பரிசுத்தொகுப்புமுதலமைச்சர் முக.ஸ்டாலின்ரேஷன் கார்டுதாரர்கள்
Advertisement
Next Article