For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்னும் மூன்று ஆண்டுகள் தான்..!! டாப் லெவலுக்கு போகும் இந்தியா..!! நிதியமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிக்கை..!!

01:39 PM Jan 30, 2024 IST | 1newsnationuser6
இன்னும் மூன்று ஆண்டுகள் தான்     டாப் லெவலுக்கு போகும் இந்தியா     நிதியமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Advertisement

அடுத்த 3 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சகம் 'இந்தியப் பொருளாதாரம் ஒரு சீராய்வு' எனும் தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ”நிதித்துறையில் தற்போது செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் பொருளாதாரம் வரக்கூடிய ஆண்டுகளில் 7 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும். மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் ஜிடிபி மற்றும் 7 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதார சக்தியாக வளர்ச்சியடையும். தற்போதைய சீர்திருத்தங்கள் தடைபடாமல் தொடர்ந்தால், 2047-க்குள் 'வளர்ந்த நாடு' எனும் இடத்தை நாம் அடைய முடியும். இந்தியப் பொருளாதாரம் 2024ஆம் நிதியாண்டில் 7 சதவீதம் அல்லது அதற்கும் மேலான வளர்ச்சி விகிதத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement