For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒருமுறை மட்டும் முதலீடு செய்தால் போதும்..!! வட்டியே இவ்வளவு வருமா..? போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்..!!

The Post Office Time Deposit Scheme offers an interest rate of 7.50%.
08:09 AM Nov 04, 2024 IST | Chella
ஒருமுறை மட்டும் முதலீடு செய்தால் போதும்     வட்டியே இவ்வளவு வருமா    போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்
Advertisement

இந்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பலனளிக்கும் பல்வேறு அஞ்சல் அலுவலக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஒரு சிறந்த திட்டம் தான் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல அல்லாமல் இந்த திட்டம் பாதுகாப்பான வருமானத்தை வழங்குகிறது. போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 7.50% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

Advertisement

இத்திட்டத்திற்கு வெவ்வேறு முதிர்வு காலங்கள் உள்ளது. நீங்கள் உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு பிரிவு 80சி-யின் கீழ் ரூ.1.50 லட்சம் வரையிலான வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் குறைந்த பட்சம் 1,000 ரூபாய் முதல் கணக்கு தொடங்கலாம். இதில் அதிகபட்ச வரம்பு இல்லை. முதலீட்டாளர்கள் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். பிக்சட் டெபாசிட்களைப் போலவே ஒரு முறை தான் முதலீடு செய்ய முடியும். பிறகு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வருமானம் வழங்கப்படும். 5 வருட முதிர்வுக் காலம் முடிந்ததும் வட்டி மற்றும் அசல் ஆகியவற்றை சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது, ஒரு வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 6.9% வட்டி கிடைக்கும். 2 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 7.0% வட்டியும், 3 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 7.1% வட்டியும், 5 வருட டைம் டெபாசிட் முதலீட்டில் அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்கப்படுகிறது. 7.50% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் மொத்த முதலீட்டு காலத்திற்கும் வட்டி 44,995 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை 1,44,995 ரூபாயாக இருக்கும்.

நீங்கள் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் விண்ணப்பிக்க முடிவு செய்துவிட்டீர்கள் என்றால், அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்-க்கு சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து முதலீடு செய்ய விரும்பும் தொகையையும் சேர்த்து கொடுங்கள். பின்னர், உங்கள் கணக்கு தொடங்கப்பட்டுவிடும்.

Read More : கொலஸ்ட்ரால் முதல் சர்க்கரை நோய் வரை..!! இந்த ஒரு ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..?

Tags :
Advertisement