ஒத்த துண்டு மட்டும்தான்!. மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளம்பெண்கள்!. வைரல் வீடியோ!
Russia: ரஷ்யாவில் ஒற்றை துண்டை மட்டும் சுற்றிக்கொண்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பெண்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவை சேர்ந்தவர் கேத் சும்ஸ்கயா. பிரபல மாடல் அழகியான இவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 30 லட்சம் பேர் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்தநிலையில் தோழிகள் 3 பேருடன் இணைந்து குளியல் அறையில் பயன்படுத்தும் துண்டு மட்டும் அணிந்தவாறு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். இதுதொடர்பான வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளார். அதில் அரைகுறையாக உடம்பை மூடியபடி, 'ஹை ஹீல்ஸ்' செருப்பு அணிந்தவாறு அவர்கள் 4 பேரும் மெட்ரோ ரயிலுக்குள் ஏறுகிறார்கள்.
பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் ரெயிலில் ஆண் பயணிகள் அருகே நெருக்கமாக அமர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்களுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு லூட்டி அடிக்கிறார்கள். இந்த வீடியோ ஒரு வாரத்திற்குள் 20 லட்சம் பார்வைகளையும் 2½ லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.
Readmore: NPS கணக்கில் யாரை நாமினி ஆக்கலாம்? நாமினிகளை ஆன்லைனின் அப்டேட் செய்வது எப்படி?