இனி எல்லா போன், லேப்டாப்களுக்கும் ஒரே சார்ஜ் கேபிள்தான்!. ஐரோப்பிய ஒன்றிய விதியை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்!.
USB Type-C : பரவலாகப் பயன்படுத்தப்படும் டைப்-சி போர்ட் தேர்வாக இருப்பதால், இந்தியாவில் விற்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரே மாதிரியான சார்ஜிங் கனெக்டர் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
பயனர்கள் பல சாதனங்களை சார்ஜ் செய்ய ஒரே கேபிளைப் பயன்படுத்தும் வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், மின்-கழிவைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவும் இந்தியாவில் விற்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரே மாதிரியான சார்ஜிங் கனெக்டர் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. பிற்காலத்தில் மடிக்கணினிகளை சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டைப் பயன்படுத்துவதையும் அரசாங்கம் கட்டாயப்படுத்தலாம். அதாவது, 2022 இல் ஐரோப்பிய ஒன்றியம் (EU) வழங்கியதைப் போன்ற இந்தியாவும் ஆணையை பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய விதி ஜூன் 2025 முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்களை சேர்க்க மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விரைவில் விதிமுறைகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவு மொபைல் போன்களுக்கு மட்டுமின்றி, லேப்டாப்களுக்கும் பொருந்துவதாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த விதி 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. USB Type-C போர்ட் தான் பொது பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கப்படும் என்று கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், இந்த விதிமுறை ஸ்மார்ட்வாட்ச்கள் போன்ற அணியும் சாதனங்களுக்கும் பேசிக் செல்போன்களுக்கும் இருக்காது எனவும் தகவல் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
பல சாதனங்களில் பல வகையான கேபிள்களை பயன்படுத்துவதால் உருவாகும் மின்-கழிவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்தபின், பயனர்கள் தங்கள் எல்லா சாதனங்களையும் ஒரே கேபிள் மூலம் சார்ஜ் செய்ய முடியும் நிலை உருவாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உத்தரவு என்ன? ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், கேமராக்கள், ஹெட்ஃபோன்கள், கையடக்க வீடியோ-கேம் கன்சோல்கள் மற்றும் போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களின் நிலையான சார்ஜிங் போர்ட்டாக USB Type-C ஐப் பயன்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் 2022 இல் ஒரு ஆணையை நிறைவேற்றியது. இந்த மாற்றம் ஆப்பிள் அதன் தனியுரிம மின்னல் போர்ட்டை USB Type-C உடன் மாற்றுவதற்கு வழிவகுத்தது, இது 2023 இல் iPhone 15 தொடரில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Readmore: காபி குடிக்காமல் இருந்தால் இறக்கும் அபாயம் 60% அதிகம்!. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!