சீசன் முழுவதும் 52 ரன்கள்தான்!… தோனியுடன் ஒப்பிட்டு மேக்ஸ்வெலை கலாய்க்கும் ரசிகர்கள்!
Maxwell: 2024 ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி 24 பந்துகள் 33 ரன்களும், டூ பிளேசிஸ் 14 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேமரான் கிரீன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐந்தாம் வரிசையில் கிளென் மேக்ஸ்வெல் களமிறங்கினார். அவர் நிலைத்து நின்று ஆடி ஆர்சிபி அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அஸ்வின் வீசிய அந்த பந்தில் துருவ் ஜுரேல்-இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான டக் அவுட் சாதனையை செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை தினேஷ் கார்த்திக் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த நேரத்தில் வர்ணனை கடமையை நிறைவேற்றிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன், நேரலையிலேயே மேக்ஸ்வெல்லை கடுமையாக சாடினார். அதாவது கிளென் மேக்ஸ்வெல்லிடமிருந்து என்ன இருந்தது?" என்று குறிப்பிட்டார். இதையடுத்து, ரசிகள் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு ஆர்சிபி அணியை கிண்டல் செய்து வருகின்றனர். அந்தவகையில் மேக்ஸ்வெல்லின் டக் அவுட்டையும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது, தோனியுடன் ஒப்பிட்டு மேக்ஸ்வெல்லின் பிட்னஸ் குறித்து ரசிகர்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக மேக்ஸ்வெல்லை 11 கோடி ரூபாய்க்கு RCB தக்க வைத்துக் கொண்டது. அவரது ஃபார்மைப் பார்க்கும்போது, அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக RCB அவரைத் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தால் அது ஆச்சரியமாக இருக்கும் என்று கருத்துகளை கூறிவருகின்றனர்.