ஆன்லைன் பேமெண்ட் Vs கேஷ் ஆன் டெலிவரி | ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய எது சிறந்தது..? - கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, கொரோனாவின் வருகைக்கு பிறகு ஆன்லைன் ஷாப்பிங் மீதான மோகம் அதிகரித்துள்ளது. இப்படி ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது அனைவரும் பணம் செலுத்தி விட்டு பின்னர் பொருளை பெறுவதில்லை. பலரும் கேஷ் ஆன் டெலிவரி (COD) என்ற ஆப்சனையும் விரும்புகின்றனர். இந்த கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை ஒரு பயனர் பயன்படுத்துகிறார் எனில், அவருக்கும் விலை சற்று அதிகம் என்று கூறப்படுகின்றது.
பிளிப்கார்டில் பொருட்களை வாங்கும்போது கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் என்பதை கொடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு நாமினல் கட்டணம் என 5 ரூபாய் விதிக்கப்படும். இது உங்களை கூடுதலாக கட்டணம் செலுத்த வழிவகுக்கலாம். அது தவிர ஷிப்பிங் கட்டணம் என சில பொருட்களுக்கு கட்டணம் விதிக்கப்படுகின்றது. இது பொருட்களின் விலையை பொறுத்து இருக்கலாம்.
நீங்கள் வாங்கும் பொருள் 500 ரூபாய்க்கு கீழாக இருந்தால் அதற்கான கட்டணமாக 40 ரூபாய் விதிக்கப்படலாம். 500 ரூபாய்க்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு ஷிப்பிங் கட்டணம் கிடையாது. எனினும் இந்த கட்டணம் இல்லாமல் பொருட்களை வாங்க வேண்டுமெனில், பிளிப்கார்ட் பிளஸ் சந்தாதாரர்களாக நீங்கள் மாறிக் கொள்ளலாம். அப்படி மாறும் பட்சத்தில் உங்களுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படுவதில்லை. எந்த வாடிக்கையாளராக இருந்தாலும் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை தேர்ந்தெடுக்கும்போது, கட்டாயம் 5 ரூபாய் கட்டணம் என்பது விதிக்கப்படுகிறது.
இ-காமர்ஸ் நிறுவனங்கள் பணத்தை கையாள்வதை குறைக்க, ஆன்லைன் பரிமாற்றங்களையே ஊக்குவித்து வருகின்றன. இதனை ஊக்குவிக்கும் விதமாக ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பல சலுகைகளையும் அறிவிக்கின்றன. ஆகவே, மேற்கண்ட கட்டணத்தை தவிர்க்க வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனையை செய்யலாம். கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்யும் பொருட்கள் பல்வேறு காரணிகளினால் டெலிவரி செய்ய முடியாமல் போகின்றன. சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்று மொத்த ஆர்டர்களில் 3இல் ஒரு பங்கு டெலிவரி செய்ய முடியாமல் போவதாக கூறுகின்றது.
பொதுவாக கிரெடிட் கார்டு மூலமாக வாங்கும்போதும், டெபிட் கார்டு மூலமாக பொருட்களை வாங்கும்போதும் சில ஆஃபர்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், கேஷ் ஆன் டெலிவரி என்ற ஆப்ஷனில் இது கிடையாது. இதனால், உங்களுக்கு விலை அதிகமாக தோன்றலாம். சில நேரங்களில் கிரெடிட் கார்டு மூலம் வாங்கும்போதும் கேஷ் பேக் சலுகையும் கிடைக்கும். ஆனால், இது எதுவும் கேஷ் ஆன் டெலிவரியில் கிடைப்பதில்லை. இதுவே விலையில் சற்று வித்தியாசத்தினை ஏற்படுத்தலாம்.
Read more ; இந்த 5 எண்ணெய்களை சமையலில் பயன்படுத்தாதீங்க.. உயிருக்கே ஆபத்து…! – நிபுணர்கள் எச்சரிக்கை