முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பதிவுத்துறை சூப்பர் திட்டம்..! பட்டா, சிட்டா.. நில விவரம்...! இனிமேல் எங்கும் அலைய வேண்டாம்...!

06:00 AM Jan 23, 2024 IST | 1newsnationuser2
Advertisement

தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மற்றும் "தமிழ்நிலம்" செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பொதுமக்கள் பயன்பெறலாம்.

Advertisement

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை மூலம் www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. அதில் பட்டா மாறுதல் -"தமிழ்நிலம்" கைப்பேசி செயலி இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டாமாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை Tamil Nilam Citizen portal http://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டாமாறுதல் கோரிவரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ் நிலம் (ஊரகம்) மற்றும் தமிழ் நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டுவர ஏதுவாக உருவாக்கபட்டு இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பட்டா / சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நில விவரம், புலப்படம், நகரநில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும் எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவை (www.eservices.tn.gov.in) இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப் பட்டியல்கள் விவரங்கள் (Correlation Statement) போன்றவை பதிவிறக்கம் செய்யவழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள், வட்டங்கள். கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விவரங்கள். இத்துறையின் முக்கிய அரசாணைகள். சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்கள் போன்றவை அறியலாம். எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் "தமிழ்நிலம்" செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பார்வையிட்டுப் பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

Tags :
chittaPattaregistrationSalemtn government
Advertisement
Next Article