For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம்..!! பணத்தை இழந்த வாலிபர் அரளி விதை சாப்பிட்டு தற்கொலை..!!

The incident of suicide of a teenager in online cricket gambling has caused a shock.
06:15 PM Jun 26, 2024 IST | Chella
ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம்     பணத்தை இழந்த வாலிபர் அரளி விதை சாப்பிட்டு தற்கொலை
Advertisement

ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடதாரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லேட் பாலகிருஷ்ணன். இவரது மனைவி மாசாணி. இவர்களது 3-வது மகன் பிரகாஷ் (32). இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக் குழு வழங்கும் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், கடன் வாங்கும் பெண்கள் சரிவர கடனை கட்டாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். சுய உதவிக் குழு பெண்களிடம் இருந்து பணம் வசூல் ஆகாததால் பிரகாஷும் அவர் பணியாற்றி வந்த மைக்ரோ பைனான்ஸ் மேனேஜர் பிரகாஷின் சம்பளத் தொகையை பிடித்தமாக வைத்துக் கொண்டார்.

இதனால் தனது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு தேவையான பொருட்கள் கூட வாங்க பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் தான், கிரிக்கெட் சூதாட்டம் பற்றி ஆன்லைனில் விளம்பரத்தை பார்க்க, எப்படியாவது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என நினைத்த பிரகாஷ், சில பெண்களிடமிருந்து வசூல் செய்த பணத்தை நிறுவனத்திற்கு கட்டாமல் சேர்த்து வைத்து அதனை ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் போட்டுள்ளார். இதில் அவர் கட்டிய அனைத்து பணமும் பறிபோனதால் மனம் உடைந்த பிரகாஷ் அக்கம் பக்கத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் கடனாக பெற்று மீண்டும் விட்டதை பிடிக்க வேண்டும் என விளையாடி உள்ளார்.

ஆனால், மேலும் நஷ்டம் அடையவே கடனாளி ஆனார் பிரகாஷ். இதனால் மனம் உடைந்த அவர், அரளி விதையை அரைத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே தனது நண்பர் விஜய பிரபாகரை தொடர்பு கொண்டு நான் அரளி விதையை அரைத்து சாப்பிட்டு விட்டேன், என்னால் கடன் வாங்கியவர்களிடம் பதில் சொல்ல முடியவில்லை. குடும்பத்திலும் பிரச்சனையாக உள்ளது எனக்கூறி அவர் இருக்கும் இடத்தின் கூகுள் மேப்பை அனுப்பி விட்டு மொபைலை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். பிறகு மேப் லொகேஷனை வைத்து அங்கு சென்று பார்த்தபோது, அவர் மயக்க நிலையில் கிடந்தார். இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ரத்த சர்க்கரை அளவு..!! காலை உணவு ரொம்ப முக்கியம்..!! அதுவும் இப்படி சாப்பிடுங்க..!!

Tags :
Advertisement