ஆன்லைன் பிளாக்மெயில்!… 1,000க்கும் மேற்பட்ட ஸ்கைப் கணக்குகள் முடக்கம்!… சைபர் கிரைம் அதிரடி!
Online Blackmail: ஆன்லைனில் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்டவைகளில் ஈடுபடும் எல்லை தாண்டிய சைபர் குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் 1,000க்கும் மேற்பட்ட ஸ்கைப் கணக்குகளை இந்தியாவின் சைபர் கிரைம் கண்காணிப்பு அமைப்பு முடக்கியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை பதிவில், ஆன்லைன் மோசடிகள் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்டவற்றால், அதிக எண்ணிக்கையிலான புகார்கள் பதிவாகி வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் இதுபோன்ற குற்றவாளிகளால் பெரும் தொகையை இழந்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.
எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உதவிக்கு 1930 ஐ அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in ஐப் பார்வையிட வலியுறுத்தியுள்ளது. இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஆன்லைன் பொருளாதார குற்றமாகும், மேலும் இது எல்லை தாண்டிய குற்ற சிண்டிகேட்களால் இயக்கப்படுகிறது" என்று உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக 'பார்சல் ஸ்கேம்' என்று அழைக்கப்படும், சைபர் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு போன் செய்து, சட்டவிரோதமான பொருட்கள், போதைப்பொருள்கள் அல்லது போலி பாஸ்போர்ட்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட பார்சல் பற்றித் தெரிவிக்கின்றனர். மற்ற சமயங்களில், சைபர் மோசடி செய்பவர்கள், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் விபத்தில் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் காவலில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
மேலும் இதுபோன்ற வழக்கில்' சமரசம் செய்ய பணத்திற்கான கோரிக்கை வைக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்கள் 'டிஜிட்டல் கைது' செய்யப்படுவார்கள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, ஸ்கைப் அல்லது பிற வீடியோ கான்பரன்சிங் தளங்களில் மிரட்டல் விடுக்கின்றனர். மோசடி செய்பவர்கள் காவல் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை போல் போலியாக உருவாக்கி, சீருடைகள் அணிந்தபடி மிரட்டி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிகளை எதிர்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் மற்ற அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் ஏஜென்சிகள், ரிசர்வ் வங்கி மற்றும் பிற அமைப்புகளுடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
"I4C-ஆனது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ளீடுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்குகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ள 1,000க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடிகளை மைக்ரோசாப்ட் உடன் இணைந்து சைபர் கிரைம் தடுத்துள்ளது. இது சிம் கார்டுகளைத் தடுப்பதற்கும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: IDIOT சிண்ட்ரோம் என்றால் என்ன?… ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் எதிர்மறை தாக்கங்கள் என்ன?