Onion | ”வரத்து குறைவு விலை அதிகம்”..!! மீண்டும் எகிறும் சின்ன வெங்காயத்தின் விலை..!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!
சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால் இல்லத்தரசிகள், உணவக உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினர் கவலையடைந்துள்ளனர்.
சமையலுக்கு பல்வேறு காய்கறிகள் இருந்தாலும் அதில் முக்கிய பங்கு வகிப்பது என்னவோ, வெங்காயமும், தக்காளியும் தான். இந்த இரண்டின் விலையும் அதிகரித்துவிட்டால், இல்லத்தரசிகள் மட்டுமல்ல உணவகம் வைத்து நடத்துபவர்கள் கூட திண்டாடுவார்கள். இந்நிலையில், சென்னை கோயம்பேட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில இருந்து விற்பனைக்காக காய்கறிகள் கொண்டுவரப்பட்டன. அதில், தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால், விற்பனை விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அதே நேரத்தில் கேரட், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 26 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரங்களில் கிலோ 20 ரூபாய் வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது 20 ரூபாய் உயர்ந்து 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு 20 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. காலிஃப்ளவர் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள், உணவக உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
Read More : Lok Sabha | இன்று வெளியாகிறது லோக்சபா தேர்தல் தேதி..? நடத்தை விதிகள் உடனே அமல்..!!