முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இரயில் மூலம் வெங்காயம் அனுப்பி வைப்பு.. அதிரடியாக குறைந்த வெங்காய விலை..!! - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

Onion has been sent to states including Delhi for the first time by rail. In that way, it has decided to sell at 35 rupees per kg.
10:17 AM Oct 21, 2024 IST | Mari Thangam
Advertisement

தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் கொள்முதல் செய்த வெங்காயத்தை, தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு கொண்டு செல்ல அரசு ரயில்வேயின் உதவியை நாடியுள்ளது.

Advertisement

இந்தியாவில் வெங்காயம் விலை உயர்வு என்பது பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. அதிக தேவை, விளைச்சல் பாதிப்பு, விநியோகக் குறைபாடு போன்ற காரணங்களால் வெங்காயம் விலை அடிக்கடி உயர்ந்துவிடுகிறது. அதுவும் இந்த பண்டிகை காலத்தில் வெங்காயம் விலை உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது. இதுபோன்ற சூழலில், வெங்காய விலை உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 1,600 மெட்ரிக் டன் வெங்காயம் விலை நிலைப்படுத்துதல் நிதியின் கீழ் ரயில் மூலம் அனுப்புவதாக அறிவித்தது. இதன் முன்முயற்சியால் 1600 மெட்ரிக் டன் வெங்காயம் ரயில்கள் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது.

முதன்முறையாக ரயில் ரேக்குகள் மூலம் அதிகமான அளவில் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இதே வெங்காயத்தை சாலை மார்க்கமாக கொண்டு வரும்போது 84 லட்சம் ரூபாய் செலவாகும் ஆனால் ரயில் மூலம் கொண்டு வரும்போது 70 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகிறது. இந்த வெங்காயத்தை பொதுமக்களுக்கு குறைவான விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

Read more ; அடுத்த 10 நாட்கள் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது..!! – வெதர்மேன் அலர்ட்

Tags :
Delhioniontrainvegetable
Advertisement
Next Article