For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்றுடன் ஓராண்டு..!! மனோபாலா மறைவுக்கு பிறகு ரிலீசான படங்கள் எத்தனை தெரியுமா..? வெயிட்டிங் லிஸ்ட்டில் இத்தனையா..?

02:17 PM May 03, 2024 IST | Chella
இன்றுடன் ஓராண்டு     மனோபாலா மறைவுக்கு பிறகு ரிலீசான படங்கள் எத்தனை தெரியுமா    வெயிட்டிங் லிஸ்ட்டில் இத்தனையா
Advertisement

தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் இருந்த மனோபாலா, கடந்தாண்டு மே மாதம் 3ஆம் தேதி காலமானார். அவர் மறைந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1979ஆம் ஆண்டு முதல் நடித்து வந்த மனோபாலா 1994ஆம் ஆண்டு முதல் முழு நேரமாக நடித்து வந்தார். இந்நிலையில், அவர் மறைவுக்கு பிறகு வெளியான அவரது திரைப்படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

Advertisement

தீரா காதல், காசேதான் கடவுளடா, கபடி ப்ரோ, ராயர் பரம்பரை, சான்றிதழ், கிக், இறுகப்பற்று, சந்திரமுகி 2, தில்லு இருந்தா போராடு, 80ஸ் பில்டப், த.நா., சிக்லெட்ஸ், இ-மெயில், ஆபரேஷன் லைலா, நினைவெல்லாம் நீயாடா, இந்தியன் 2, அந்தாகன், காதல் கண்டிஷன்ஸ் அப்ளை, இங்க நான்தான் கிங்கு ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. இதில் சில படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

இதில், த.நா., இ-மெயில், ஆபரேஷன் லைலா, இந்தியன் 2, அந்தாகன், இங்க நான்தான் கிங்கு ஆகிய படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்தியன் 2 படத்தில் மனோபாலாவுக்கு சிறந்த நகைச்சுவை கதாபாத்திரம் வழங்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, பிரசாந்த் நடிப்பில் வெளியீட்டிற்காக காத்திருக்கும் அந்தாகன் திரைப்படத்திலும், சந்தானம் நடிப்பில் வெளியாகவுள்ள இங்க நான்தான் கிங்கு திரைப்படத்திலும் மனோபாலாவுக்கு நல்ல நகைச்சுவை கதாபாத்திரம் வழங்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதவி இயக்குனராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய மனோபாலா, ஆகாய கங்கை படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். முதல் படம் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், பிள்ளை நிலா படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து, கன்னடத்தில் விஷ்ணுவர்தனை வைத்து டிசம்பர் 31, ரஜினிகாந்தை வைத்து ஊர்க்காவலன், விஜயகாந்தை வைத்து சிறைப்பறவை, என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் என பல வெற்றி படங்களை கொடுத்தார். இந்தியிலும் மேரா பதி சர்ஃப் மேரா ஹை என்ற படத்தையும் ஜிதேந்திராவை வைத்து இயக்கியுள்ளார்.

Read More : 2 கோடி இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்..!! உங்களுக்கும் இப்படி வருதா..? என்ன காரணம்..?

Advertisement