”ஒரே பேட்டி.. மொத்தமும் முடிஞ்சது”..!! ஸ்கோர் செய்த உதயநிதி..!! 2026 தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அஜித்..?
சினிமாவை தாண்டி தனது ஃபேஷனிலும் அசத்தி வருகிறார் நடிகர் அஜித். அந்த வகையில், துபாய் கார் ரேஸில் அஜித்தின் அணி 3-வது இடத்தை பிடித்தது. இதையடுத்து, அஜித்துக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே, அஜித் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றும் வைரலாகி வருகிறது. விஜய் வாழ்க அஜித் வாழ்க என்று சொல்கிறீர்கள்… நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்? என அஜித் பேசியுள்ளார். அவர் பேசுகையில், உங்களுக்கு நல்ல எண்ணங்கள் இருந்தால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் அழகானதாக இருக்கும். உங்களுடைய லட்சியங்களை அடைய உங்களின் திறனை அதற்கேற்ப வளர்த்துக் கொள்ளுங்கள். `அஜித் வாழ்க விஜய் வாழ்க' எனக் கூறுகிறீர்கள். நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்..? என பேசியிருந்தார் அஜித்.
இதற்கிடையே, இந்த பேட்டியை பார்த்து விஜய் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். காரணம், தனது ரசிகர்களை நம்பி சினிமாவை விட்டு கட்சி தொடங்கியிருக்கும் நிலையில், ரசிகர்களை Trigger செய்யும் வகையில் அஜித் இப்படி பேசியிருப்பதாக விஜய் ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். விஜய் குறித்து துபாயில் அஜித் பேச வேண்டிய அவசியம் என்ன..? அஜித் இப்படி பேசுவது விஜய்க்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, 2026 சட்டமன்ற தேர்தலில் அஜித் ரசிகர்களின் வாக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. விஜய் ரசிகர்கள் இப்போதெல்லாம் அஜித் படங்களின் டீசரை புகழ்ந்து ட்வீட் செய்து வருகின்றனர். இதனால், அஜித் ரசிகர்கள் தவெக-வில் இணையவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அஜித்தின் இந்த பேட்டி, ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அஜித்துக்கு துணை முதலமைச்சர் தெரிவித்த வாழ்த்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அரசியல் உள்நோக்கம் இதில் இருப்பதாக தவெகவினர் புலம்பி வருகின்றனர்.