For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"புற்றுநோயை விரட்ட இந்த ஒரு பூ போதும்.." கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.!

06:53 AM Nov 24, 2023 IST | 1newsnationuser4
 புற்றுநோயை விரட்ட இந்த ஒரு பூ போதும்    கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
Advertisement

நம் கிராமப்புறங்களில் காணப்படும் "நித்திய கல்யாணி பூ" பல்வேறு மருத்துவ பயன்களை உள்ளடக்கியது என்று கேள்விப்பட்டிருப்போம். இந்தப் பூ ஆயுர்வேத மருத்துவத்திலும் நாட்டு வைத்தியத்திலும் சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் இந்த பூவில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து புற்று நோய்க்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று இந்த பதிவில் பார்ப்போம்

Advertisement

பொதுவாகவே நித்திய கல்யாணி பூவின் தண்டு வேர்கள் மற்றும் மலர்கள் ஆகியவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பொதுவாகவே இந்த மலர் ரத்த அழுத்தம் மனச்சோர்வு மாதவிடாய் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கிறது. இந்த நித்திய கல்யாணி பூவுடன் கருஞ்சீரகம் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்து புற்றுநோயையும் குணமாக்கும் வல்லமை கொண்டது என பாரம்பரிய மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் .

இந்த மருந்து தயாரிப்பதற்கு 10 நித்திய கல்யாணி பூக்களுடன் சிறிதளவு கருஞ்சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும் இவை நன்றாக கொதித்ததும் வடிகட்டி இந்த தேநீரை குடித்து வர ஆறாத புண்கள் மற்றும் சீழ் வடிந்த புண்கள் குணமாகும் . மேலும் கருஞ்சீரகம் உடம்பில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மையை வெளியேற்றும் வல்லமை கொண்டது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த தேநீரை குடித்து வர அவர்களது புற்றுநோய் கட்டிகள் குணமடையும்.

நீரிழிவு நோயால் ஏற்படும் புண்களும் இந்த நீரை குடித்து வந்தால் விரைவாக குணமடையும். எனவே பல்வேறு நோய்களுக்கு மருந்தாக விளங்கும் இந்த இயற்கை மருந்தை நோயாளிகள் பயன்படுத்தலாம். எனினும் இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை ஆலோசித்துக் கொள்ள வேண்டும்.

Tags :
Advertisement